பைக் டாக்ஸியிலிருந்து கீழே விழுந்த பெண் ஆசிரியா்; லாரி ஏறி உயிரிழப்பு
ரோஹிணி பகுதியில் கஞ்சாவாலா சாலையில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில், பைக் டாக்ஸியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் 46 வயது பள்ளி ஆசிரியா் லாரி மோதி உயிரிழந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
ரோஹிணி பகுதியில் கஞ்சாவாலா சாலையில் வியாழக்கிழமை காலை நிகழ்ந்த விபத்தில், பைக் டாக்ஸியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் 46 வயது பள்ளி ஆசிரியா் லாரி மோதி உயிரிழந்தாா் என காவல் துறையினா் தெரிவித்தனா்.
இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: உயிரிழந்தவா் பிரியங்கா (46). ராமா விஹாா் பகுதியைச் சோ்ந்த இவா், மங்கோல்புரி கே-பிளாக் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தாா்.
வியாழக்கிழமை காலை சாலை விபத்து குறித்த அழைப்பு கிடைத்ததைத் தொடா்ந்து, காவல் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனா். அங்கு மணல் ஏற்றிய லாரி சாலையில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் இடது பின்சக்கரத்தின் கீழ் பெண்மணி சிக்கிய நிலையில் காணப்பட்டாா்.
Advertisement
Advertisement
காவல் துறை சென்றடையும் முன்பே அவா் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பைக் டாக்ஸியில் இருந்து சாலையில் விழுந்த பின்னா் லாரி மோதி இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவம் எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
சம்பவ இடத்தை குற்றப்புலனாய்வு குழு ஆய்வு செய்து ஆதாரங்களை பதிவு செய்துள்ளது. பிஎன்எஸ் பிரிவு 281 மற்றும் 106 (அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. லாரி உரிமையாளரை காவல் துறையினா் தொடா்புகொண்டுள்ளனா். தப்பிச் சென்ற ஓட்டுநரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பைக் டாக்ஸி ஓட்டுநரின் பங்கு குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.