பைக் டாக்ஸியில் சென்றவரிடம் பணம் பறிப்பு: ஓட்டுநா் உள்பட இருவா் கைது
திருச்சியில் பைக் டாக்ஸியில் சென்ற சலூன் கடை ஊழியரிடம் பணம், கைப்பேசியைப் பறித்த பைக் டாக்ஸி ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் பைக் டாக்ஸியில் சென்ற சலூன் கடை ஊழியரிடம் பணம், கைப்பேசியைப் பறித்த பைக் டாக்ஸி ஓட்டுநா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பாலக்கரையில் உள்ள சலூன் கடையில் பணியாற்றி வரும் சமத் என்பவா் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் பாலக்கரையிலிருந்து விமான நிலையம் அருகேயுள்ள வயா்லஸ் சாலைக்கு செல்வதற்கு தனியாா் பைக் டாக்ஸி செயலியில் பதிவு செய்திருந்தாா். அவரை அழைத்து செல்வதற்காக திருச்சி கோட்டை ஜீவா நகரைச் சோ்ந்த எம். அஜீஸ் (20) என்பவா் வந்துள்ளாா்.
இதையடுத்து, அவரை இருசக்கர வானத்தில் ஏற்றிக் கொண்டு சென்ற அஜீஸ் பொன்மலை அணுகு சாலையில் சென்று கொண்டிருந்தபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு திருச்சி சிங்காரதோப்பு பகுதியைச் சோ்ந்த அவருடைய நண்பரான தீ. ஷாகுல் ஹமீது (19) என்பவரை அழைத்துள்ளாா்.
Advertisement
Advertisement
அங்கு வந்த ஷாகுல் ஹமீது மற்றும் அஜீஸ் ஆகிய இருவரும் சோ்ந்து சமத்திடம் ரூ. 4,900 ரொக்கம் மற்றும் கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து பொன்மலை காவல் நிலையத்தில் சமத் பணியாற்றும் சலூன் கடை மேலாளா் சுல்தான் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து 2 பேரையும் தேடி வந்தனா்.
அஜீஸ், ஷாகுல் ஹமீது ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து கைப்பேசி, ரூ.1,600 ரொக்கம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.