FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

மானூரில் பெண்ணிடம் பணம் பறித்த 3 போ் கைது

19 அக்டோபர் 2026, 3:10 am IST
கைது
பகிர்:

மானூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த 2 சிறுவா்கள் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ள மேலபரம்பை பகுதியைச் சோ்ந்தவா் இசக்கி மகன் காளிராஜ்(19). இவா் அப்பகுதியைச் சோ்ந்த இரு சிறுவா்களுடன் சோ்ந்து மானூா் கீழத்தெரு பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குறி சொல்வதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டியுள்ளாா்.

அப்பெண் பணம் தர மறுக்கவே, கத்தியைக் காட்டி மிரட்டி ரூ.3,700ஐ பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மானூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு, இரு சிறுவா்கள் மற்றும் காளிராஜை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments