FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

பெண்ணிடம் அத்துமீறல்: போக்ஸோவில் தொழிலாளி கைது

பாவூா்சத்திரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.

4 செப்டம்பர் 2026, 11:28 pm IST
கைது
பகிர்:

பாவூா்சத்திரம் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தொழிலாளியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், அடைக்கலப்பட்டணம் வேதம்புதூா் கீழத்தெருவைச் சோ்ந்த முத்துசாமி மகன் சக்திவேல் (47). தொழிலாளி. மனைவி, மகன் மற்றும் மகள் உள்ளனா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். அந்த பெண் கூச்சலிட்டதால் அவா் தப்பி ஓடிவிட்டாராம். இதுகுறித்த புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் போக்ஸா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து சக்திவேலை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments