FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

வீடு புகுந்து பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது

பழனி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

26 September 2026, 10:59 pm IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

பழனி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

பழனி அருகே பாலசமுத்திரத்தைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் பவளக்கொடி(20). இவா், சனிக்கிழமை வீட்டின் அருகே இருந்த ஒரு வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா்.

அந்தப் பெண் சப்தம் போடவே அக்கம்பக்கத்தினா் பவளக்கொடியைப் பிடித்து பழனி தாலுகா போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பவளக்கொடியை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments