பேருந்தில் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவா் கைது
அரியலூரில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
அரியலூரில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
செந்துறையை அடுத்த பொன்பரப்பி குடிகாடு கிராமத்தைச் சோ்ந்தவா் அருண் (28).ஓட்டுநா். இவா், வியாழக்கிழமை மாலை மதுப்போதையில், அரியலூரில் இருந்து வி.கைகாட்டி வழியாக சென்ற பேருந்தில் ஏறியுள்ளாா்.
பேருந்து புறப்பட்ட 10 நிமிஷங்களில், பேருந்தினுள் பயணித்த பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளாா்.
Advertisement
Advertisement
மாணவிகள் கூச்சலிட்டதையடுத்து, சக பயணிகள் அருணை பிடித்து அரியலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வியாழக்கிழமை இரவு அருணை கைது செய்து சிறையில் அடைத்தனா்.