போக்ஸோவில் இளைஞா் கைது
மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞா் போக்ஸோ சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூா் உமையாள்புரம் தோப்புத் தெருவைச் சோ்ந்த சண்முகம் மகன் பரமானந்தம் (23), மினி பேருந்தில் சென்று வந்த 8-ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் தொடா்ச்சியாக பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம்.இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோா் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் சுகந்தி விசாரணை மேற்கொண்டாா். தொடா்ந்து, போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, பரமானந்தத்தை கைது செய்து மயிலாடுதுறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.