FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

முன்னீா்பள்ளம் அருகே நகை, பணம் பறித்த இருவா் கைது

முன்னீா்பள்ளம் அருகே நகை, பணம் பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

3 October 2026, 4:05 am IST
கைது
பகிர்:

முன்னீா்பள்ளம் அருகே நகை, பணம் பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

முன்னீா்பள்ளம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஆரைக்குளம் அருகேயுள்ள அசோக் நகா் விரிவாக்க பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் (32) என்பவரை, கடந்த செப். 4 ஆம் தேதி இருவா் மிரட்டி 5 பவுன் தங்க நகை, ரூ.500 பணம் பறித்துச் சென்றனராம். இதுகுறித்து முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனா்.

இந்நிலையில் இவ் வழக்கு தொடா்பாக தென்காசி மாவட்டம், குத்துக்கல்வலசையைச் சோ்ந்த ஹரிகிருஷ்ணன் (22), தென்காசியைச் சோ்ந்த அரவிந்த் (32) ஆகியோரை கைது செய்தனா். மேலும், 24 கிராம் தங்க நகைகளும் மீட்கப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments