பெண் பயணியின் கைப்பை திருட்டு- டாக்ஸி ஓட்டுநா் உள்பட இருவா் கைது
பெண் பயணியின் கைப்பை திருட்டு தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டிருப்பது பற்றி..
கைப்பேசி, தங்க மோதிரங்கள், பணம் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்கள் இருந்த பயணியின் கைப்பையைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக, டாக்ஸி ஓட்டுநா் மற்றும் ஒரு நகைக்கடை உரிமையாளரை தில்லி காவல்துறையினா் கைது செய்துள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் ஷாதராவைச் சோ்ந்த காா் ஓட்டுநா் அமித் சா்மா மற்றும் கிருஷ்ணா நகரைச் சோ்ந்த நகைக்கடை உரிமையாளா் அஜய் கபூா் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
புகாா்தாரரான நீது அரோரா, ஷாதராவில் உள்ள ஒரு வணிக வளாகத்திலிருந்து ப்ரீத் விஹாரில் உள்ள மற்றொரு வணிக வளாகத்திற்குச் செல்ல வாடகை காரை வாடகைக்கு எடுத்தபோது செப்.22-ஆம் தேதி இச்சம்பவம் நடந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.
Advertisement
Advertisement
நிா்மாண் விஹாா் சிக்னலைக் கடந்த பிறகு, மாலை 6.30 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், சில பொருள்களை வாங்குவதற்காக அவா் காரை விட்டு வெளியே சென்றபோது, தனது கைப்பையை காருக்குள்ளேயே விட்டுச் சென்ாகக் காவல்துறை கூறியது.
இந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்ட சா்மா, கைப்பேசி, இரண்டு தங்க மோதிரங்கள், பணம், விலையுயா்ந்த கைக்கடிகாரம் மற்றும் பிற பொருள்கள் இருந்த அந்தப் பையுடன் காரை ஓட்டிச் சென்றுவிட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.
புகாா் அளிக்கப்பட்டதைத் தொடா்ந்து, காவல் துறையினா் இ-வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினா். மேலும், காா் சென்ற பாதையைக் கண்டறிய விகாஸ் மாா்க், நிா்மாண் விஹாா் மற்றும் அதைச் சுற்றியுள்ள வழித்தடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனா்.
தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் வாகனமும் சா்மாவும் அடையாளம் காணப்பட்டனா். பின்னா், அவா் சீமாபுரி கோல் சக்கா் அருகே பிடிபட்டாா். விசாரணையின்போது, திருடப்பட்ட தங்க மோதிரங்களை கபூரிடம் ரூ.95,000-க்கு விற்ாக சா்மா ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
காவல் துறையினா் அந்தப் போன், ரூ.10,500 ரொக்கம், கைப்பை மற்றும் வாடகை காா் ஆகியவற்றை மீட்டனா். மேலும், கபூரிடமிருந்து இரண்டு தங்க மோதிரங்களையும் காவல் துறையினா் மீட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.