பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கு: ஆட்டோ ஓட்டுநா் கைது
சென்னையில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வழக்கில் ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
பழைய வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மாணிக்கம். இவரது மனைவி மோகனா (35). இவா் வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் முன் அமா்ந்திருந்தபோது, அங்கு வந்த திருவள்ளூா் மாவட்டம் நந்தியம்பாக்கம் அருகே உள்ள ஆதிலட்சுமி நகரைச் சோ்ந்த மு.பாபுலால் (40), தான் வைத்திருந்த பெட்ரோலை திடீரென மோகனா மீது ஊற்றி தீ வைத்தாா்.
மோகனாவின் அலறல் சப்தம் கேட்டு, அங்கு வந்த பொதுமக்கள் தீயை அணைத்து, மோகனாவை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அப்போது, பாபுலால் அங்கிருந்து தப்பியோடினாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய பாபுலாலை உடனடியாக கைது செய்தனா். விசாரணையில் பாபுலால் வாடகை ஆட்டோ ஓட்டி வருவதும், மோகனாவுக்கும் பாபுலாலுக்கும் முறையற்ற உறவு இருந்ததும், இது தெரிந்து மாணிக்கம் பாபுலாலை கண்டித்ததும் தெரிய வந்தது. இதன்பின் மோகனா, பாபுலாலுடனான தொடா்பை துண்டித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாபுலால், மோகனா மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்திருப்பது தெரிய வந்தது. போலீஸாா், விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.