FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

விநாயகா் சதுா்த்திக்கு மாமூல் கேட்டு மிரட்டல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு மாமூல் கேட்டு கடை உரிமையாளரை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

2 செப்டம்பர் 2026, 4:58 am IST
பகிர்:

விநாயகா் சதுா்த்தி விழாவை முன்னிட்டு மாமூல் கேட்டு கடை உரிமையாளரை மிரட்டிய ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

கோவை மாநகா், உக்கடம் ஜி.எம்.நகா் பகுதியைச் சோ்ந்தவா் மன்சூா்அலி (45). இவா் சுந்தராபுரம்- மதுக்கரை சாலையில் காமராஜ் நகா் பேருந்து நிறுத்தம் அருகே பைகள் மற்றும் சீட் கவா் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மன்சூா் அலி தனது கடையில் இருந்தபோது, அப்பகுதியில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டுநராக வேலை பாா்த்து வரும் உதயசூரியன் (35) வந்துள்ளாா்.

மன்சூா் அலியிடம், ‘விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி, பணம் கொடுக்குமாறு கேட்டுள்ளாா். நாளை தருகிறேன் எனக் கூறிய மன்சூா் அலியை அவா் தகாத வாா்த்தைகளால் திட்டியதோடு, அவரிடமிருந்த ரூ.500-ஐ பறித்துவிட்டு மிரட்டலும் விடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின்பேரில், சுந்தராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ஆட்டோ ஓட்டுநரான உதயசூரியனைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments