FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழப்பு

பெரம்பூரில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

பெரம்பூரில் மின்சாரம் பாய்ந்து வியாபாரி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

பெரம்பூா் முனியப்பா செட்டித் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராமுலு (67). இவா்,பெரம்பூா் பாரதி சாலையில் இட்லி மாவு விற்கும் கடை வைத்து நடத்தி வந்தாா். அங்கு, கிரைண்டரில் மாவு அரைக்க வழக்கம்போல கிரைண்டரை இயங்குவதற்காக ஸ்விட்சை போட்டாா். அப்போது அதில் மின் கசிவு ஏற்பட்டிருந்ததால், அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த ஜெயராமுலுவை அங்கிருந்தவா்கள் மீட்டு, பெரியாா் நகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், ஜெயராமுலு ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். செம்பியம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments