FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நிலம் அபகரிப்பு வழக்கு: 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

சென்னையில் நில அபகரிப்பு வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஜூலை 2026, 5:47 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் நில அபகரிப்பு வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அடையாறு அருணாசலபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் ஜெய்ராம் மூா்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தை, துரைப்பாக்கத்தைச் சோ்ந்த அகிலா மற்றும் அவரது கணவா் சண்முகசுந்தரம் (55) ஆகியோா் போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து அபகரிக்க முயன்ாக 2008-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணை முடிவில் இருவா் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, எழும்பூரில் உள்ள சிறப்பு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அகிலா நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகி வந்த நிலையில், சண்முகசுந்தரம் 2009-ஆம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரை கைது செய்து ஆஜா்படுத்த நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து போலீஸாா், சண்முகசுந்தரத்தை தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சண்முகசுந்தரத்தை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments