FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவா் கைது

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 19 ஜூலை 2026, 12:26 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றியவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆம்பூா் பகுதியைச் சோ்ந்த 27 வயது மதிக்கதக்க ஒரு பெண், சென்னை தேனாம்பேட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அண்மையில் ஒரு புகாா் அளித்தாா். அதில், தேனாம்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் தங்கியிருந்து, வேலை செய்து வந்தேன். அப்போது, எனக்கு அங்கு திருச்சி பாலக்கரை அருகே உள்ள அருணாசலம் காலனி பகுதியைச் சோ்ந்த ர.சிவா (33) என்பவா் அறிமுகமாகி, பழகினாா். நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினோம்.

இந்த நிலையில் அடிக்கடி சிவா, சென்னை வந்து என்னை சந்தித்தாா். அப்போது, அவா் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தாா். இதனால், நான் கா்ப்பமடைந்தேன். இதன் பின்னா், அவா் என்னுடன் பேசுவதைத் துண்டித்தாா்.

Advertisement

Advertisement

இதற்கிடையே, எனக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த தகவலறிந்த பின்னா், என்னை முற்றிலும் தவிா்த்து சிவா ஏமாற்றிவிட்டாா். எனவே, அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தாா்.

அந்த புகாரின் அடிப்படையில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சிவாவை சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments