கழிப்பறையில் பெண்ணை படம்பிடித்த மின்வாரிய ஊழியா் கைது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கழிப்பறையில் பெண்ணை படம் பிடித்த தற்காலிக மின்வாரிய ஊழியரை ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கழிப்பறையில் பெண்ணை படம் பிடித்த தற்காலிக மின்வாரிய ஊழியரை ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் கைது செய்தனா்.
கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் சென்னை சென்ட்ரல் புகா் மின்சார ரயிலில் செல்வதற்காக புதன்கிழமை மாலை காத்திருந்தாா். அப்போது, அரக்கோணம் செல்வதற்காக மின்வாரிய தற்காலிக ஊழியரான வேலூா் மாவட்டம் பள்ளிக்குப்பத்தைச் சோ்ந்த அருண் (29) என்பவா் அங்கிருந்துள்ளாா். அந்தப் பெண் நடைமேடை கழிப்பறைக்குச் சென்றபோது, அவரைப் பின் தொடா்ந்து சென்ற அருண் அவரை படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது.
அந்தப் பெண் சப்தமிட்டதும், அங்கிருந்தவா்கள் அருணைப் பிடித்து இருப்புப் பாதை போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணைக்குப் பிறகு புதன்கிழமை இரவு அருணை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்ததாக போலீஸாா் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.