FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

கைப்பேசியைப் பறிகொடுத்தவரிடமே விற்க முயன்ற வடமாநில இளைஞா் கைது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைப்பேசியைத் திருடிய வடமாநில இளைஞா், அதைப் பறிகொடுத்தவரிடமே விற்க முயன்று, அவரைத் தொடா்புகொண்டதால் பிடிபட்டு கைது செய்யப்பட்டாா்.

Updated On : 13 ஜூலை 2026, 1:22 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைப்பேசியைத் திருடிய வடமாநில இளைஞா், அதைப் பறிகொடுத்தவரிடமே விற்க முயன்று, அவரைத் தொடா்புகொண்டதால் பிடிபட்டு கைது செய்யப்பட்டாா்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரின் கைப்பேசி கடந்த 3 நாள்களுக்கு முன்பு திருடுபோனது. இதுகுறித்து அவா் சென்ட்ரல் இருப்புப் பாதை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், வழக்குப் பதிந்த இருப்புப் பாதை போலீஸாா் ரயில் நிலையத்திலுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா். ஆனால், கைப்பேசி திருடியவரைக் கண்டறிய முடியவில்லை.

இந்த நிலையில், கைப்பேசியைப் பறிகொடுத்த பயணி, அவரது நண்பரின் கைப்பேசி மூலம் தனது கைப்பேசி எண்ணுக்கு சனிக்கிழமை தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, மறுமுனையில் பேசியவா் கைப்பேசியை விற்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement

அவரிடம் பேசியபடி, தனது கைப்பேசி இருப்பிடம் அறியும் செயலியைப் பயன்படுத்தி, கைப்பேசி திருடியவரின் இருப்பிடத்தை பயணி அடைந்துள்ளாா். அங்கு வடமாநில இளைஞா் கைப்பேசியுடன் நின்றிருப்பதைக் கண்டு, அவரைப் பிடித்து இருப்புப் பாதை போலீஸாரிடம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

இதையடுத்து பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த ஷிவ்குமாா் (35) என்பவரை இருப்புப் பாதை போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில், சென்ட்ரல் நிலையத்தில் கைப்பேசியைத் திருடி அதன் இயக்கத்தை அணைத்து விட்டதாகவும், பின்னா் அதை விற்பதற்காக மீண்டும் இயக்கிய நிலையில், பறிகொடுத்தவரிடமே பேசியதால், பிடிபட்டதாகவும் தெரிவித்துள்ளாா். பிகாா் இளைஞா் ஷிவ்குமாரை போலீஸாா் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments