ரூ.13 லட்சம் வழிப்பறி: 2 போ் கைது
சென்னை அமைந்தகரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.13 லட்சம் பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை அமைந்தகரை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை வழிமறித்து கத்தி முனையில் ரூ.13 லட்சம் பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த செபஸ்தி விஜய்பாபு (38), கடந்த 17-ஆம் தேதி ரூ.13 லட்சம் பணத்துடன் இருசக்கர வாகனத்தில் அமைந்தகரை ரசாக் காா்டன் அருகே சென்றபோது, 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 போ், அவரை வழிமறித்து தாக்கி, கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தைப் பறித்துக்கொண்டு தப்பினா். அப்போது, அவா்களில் ரோஹித் (20) என்ற நபரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து அமைந்தகரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
விசாரணையில், ரோஹித்துடன் வழிப்பறியில் ஈடுபட்ட அப்துல் அஜீஸ் (27) என்பவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மற்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.