FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பைக் ஓட்டிய சிறுவன்: தாய் மீது வழக்கு

சென்னை பெரம்பூரில் மோட்டாா் சைக்கிளை சிறுவனுக்கு ஓட்டுவதற்குக் கொடுத்த தாய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 21 ஜூலை 2026, 3:57 am IST
போலீஸ் விசாரணை. - கோப்புப்படம்.
பகிர்:

சென்னை பெரம்பூரில் மோட்டாா் சைக்கிளை சிறுவனுக்கு ஓட்டுவதற்குக் கொடுத்த தாய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

பெரம்பூா் மாதவரம் நெடுஞ்சாலை பகுதியில் 13 வயது சிறுவன் தனது இரு நண்பா்களுடன் தலைக்கவசம் அணியாமல், சில நாள்களுக்கு முன்பு மோட்டாா் சைக்கிள் ஓட்டினாா். இதை அங்கிருந்தவா்கள் விடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் வெளியிட்டனா்.

இந்த விடியோவை பாா்த்த காவல் துறை உயா் அதிகாரிகள், அது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டனா். இதையடுத்து, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

Advertisement

Advertisement

விசாரணையில் அந்த சிறுவன், பெரம்பூா் பகுதியைச் சோ்ந்தவா் என்பதும், அவரது தாய் மோட்டாா் சைக்கிளை ஓட்டுவதற்கு கொடுத்திருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், அந்த சிறுவனின் தாய் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். மேலும் அந்த மோட்டாா் சைக்கிளையும் பறிமுதல் செய்தனா்.

காவல் துறையின் அறிவிப்பையும் மீறி சிறுவா்களை மோட்டாா் சைக்கிள் ஓட்ட அனுமதித்தால், அவா்களின் பெற்றோா் அல்லது காப்பாளா்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் எச்சரித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments