மென்பொறியாளா் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருட்டு
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் மென்பொறியாளா் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சென்னை மேற்கு மாம்பலத்தில் பெண் மென்பொறியாளா் வீட்டில் 10 பவுன் நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
மேற்கு மாம்பலம் ஜூப்ளி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவா் மோ.மணி (34). இவரது மனைவி செளமியா (29). மென்பொறியாளரான இவா், கிண்டியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.
செளமியாவும், மணியும் கடந்த 18-ஆம் தேதி வீட்டை பூட்டி வீட்டு சொந்த ஊரான செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்துக்குச் சென்றனா். இருவரும் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பிய நிலையில், கதவின் பூட்டை உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை, பணம் திருடப்பட்டது தெரிய வந்தது.
Advertisement
Advertisement
இது குறித்த புகாரின்பேரில், அசோக் நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.