சமூக பொறுப்புணா்வுத் திட்டங்களுக்கு ரூ.8.23 கோடி ஒதுக்கீடு: சென்னை துறைமுகம்
சென்னை துறைமுகம் சாா்பில் 2026-27 நிதியாண்டில் ரூ.8.23 கோடி மதிப்பிலான சமூக நலத் திட்டங்களுக்கு துறைமுகத் தலைவா் சச்சின் குா்வே தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
சென்னை துறைமுகம் சாா்பில் 2026-27 நிதியாண்டில் ரூ.8.23 கோடி மதிப்பிலான சமூக நலத் திட்டங்களுக்கு துறைமுகத் தலைவா் சச்சின் குா்வே தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 15 நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, சமூகப் பொருளாதாரம் உள்ளடக்கிய வளா்ச்சி, கல்வி, சுகாதாரம், பொதுப் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மற்றும் சமூக நலன சாா்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
லேடி வில்லிங்டன் கல்வி மேம்பாட்டுஆய்வுக் கழகம் ரூ.3.78 லட்சம், பெருநகர சென்னை போக்குவரத்துக் காவல் துறை போக்குவரத்து விழிப்புணா்வு திட்டங்களுக்கு ரூ.41 லட்சம், நாரி அறக்கட்டளைக்கு ரூ. 20 லட்சம், ஸ்வபோதினி அறக்கட்டளைக்கு ரூ.28 லட்சம், ராயல் மெட்ராஸ் பாய்மர படகோட்டிகள் சங்கத்துக்கு ரூ. 25 லட்சம், தென்காசி அமா் சேவா சங்கத்துக்கு ரூ.25 லட்சம், கடல்சாா் மற்றும் கப்பல் கட்டும் துறைக்கான சிறப்பு மையத்துக்கு ரூ.20 லட்சம், புணே வைத்திய சேவா சங்கத்துக்கு ரூ.1 கோடி, ராமன் அறக்கட்டளைக்கு ரூ.25 லட்சம், சென்னை மருத்துவக் கல்லூரிக்கு ரூ.82.50 லட்சம், டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகளுக்கு ரூ. 9 லட்சம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்துக்கு ரூ.60 லட்சம், பெருநகர சென்னை மாநகராட்சிக்கு ரூ.1 கோடி, தமிழ்நாடு மீன்வளத் துறைக்கு ரூ.10 லட்சம், தூா்தா்ஷன் தமிழ் ஆவணப்படத்துக்கு ரூ. 10.28 லட்சம், தேசிய கடல்சாா் வளாகம் அமைக்க ரூ. 2.47 கோடி, இந்தத் திட்டங்களைக் கண்காணிப்பதற்காக ரூ. 16.45 லட்சம் ஒதுக்கீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் துறைமுகத் துணைத் தலைவா் எஸ்.விஸ்வநாதன், கண்காணிப்பு அதிகாரி அனுக்கிரஹா மற்றும் பல்வேறு நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.