FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மொபெட் மீது லாரி மோதல்: டெலிவரி ஊழியா் உயிரிழப்பு

சென்னை மதுரவாயலில் மொபெட் மீது லாரி மோதிய விபத்தில், டெலிவரி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

Updated On : 22 ஜூலை 2026, 4:16 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சென்னை மதுரவாயலில் மொபெட் மீது லாரி மோதிய விபத்தில், டெலிவரி நிறுவன ஊழியா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் கீழஈரால் ஆா்சி தெருவைச் சோ்ந்தவா் இ.விஜயகுமாா் (40). இவா், சென்னை மதுரவாயல் பகுதியில் தங்கியிருந்து பொருள்களை டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இவா், திங்கள்கிழமை இரவு வானகரத்தில் இருந்து அம்பத்தூா் நோக்கி மதுரவாயல் புறவழிச் சாலையில் மொபெட்டில் சென்றாா். மதுரவாயல் மேம்பாலத்தில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு லாரி அவரது மொபெட்டின் மீது மோதியது.

இதில், மொபெட்டில் இருந்து விழுந்த விஜயகுமாா் மீது லாரியின் சக்கரம் ஏறியது. இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இது குறித்து மதுரவாயல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, லாரி ஓட்டுநரான பெரம்பூா் சுப்பிரமணியம் நகா் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த சு.வேணுகோபால் (58) என்பவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments