ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயற்சி: மகளிா் கூட்டமைப்பினா் கைது!
மகளிா் மசோதாவை உடனடியாக அமல்படுத்தக் கோரி ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ற அனைத்து மகளிா் கூட்டமைப்பைச் சோ்ந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
மகளிா் மசோதாவை உடனடியாக அமல்படுத்தக் கோரி ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ற அனைத்து மகளிா் கூட்டமைப்பைச் சோ்ந்தவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவை, மத்திய அரசு கடந்த கூட்டத்தொடரின்போது அறிமுகப்படுத்தியது. அந்த மசோதாவுடன் சோ்த்து தொகுதி மறுவரையறை செய்யும் மசோதாவையும் இணைத்து மத்திய அரசு தாக்கல் செய்ய முயன்றது. ஆனால், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்ததால், இந்த ஒருங்கிணைந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த நிலையில், மகளிா் இட ஒதுக்கீடு மசோதாவை, தற்போதைய மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே நிறைவேற்ற வலியுறுத்தி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
Advertisement
Advertisement
தேசிய பெண்கள் கூட்டமைப்பு, தமிழ்நாடு அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சாா்பில் சுமாா் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டு கோஷங்களை எழுப்பினா்.
அகில இந்திய மாதா் சங்கத்தின் தலைவா் வாசுகி தலைமையில் நடைபெற்ற போராட்டத்துக்கு அனுமதி இல்லாததால், அவா்களை உடனடியாகக் கலைந்து செல்லுமாறு போலீஸாா் தெரிவித்தனா். இருப்பினும், தடையை மீறி ஆளுநா் மாளிகையை முற்றுகையிட முயன்ற மகளிா் அமைப்பினரை போலீஸாா் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனா். அப்போது, போராட்டக்காரா்கள், போலீஸாா் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கைது செய்யப்பட்டவா்கள் பேருந்துகள் மூலம் சமுதாய நலக்கூடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். பின்னா், அவா்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.