FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பேருந்து, ரயில்களில் திருட்டு: பெண் கைது

பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண்ணை வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 25 ஜூலை 2026, 5:42 am IST
கோப்புப் படம்
பகிர்:

பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணிகளிடம் திருட்டில் ஈடுபட்டு வந்த பெண்ணை வளசரவாக்கம் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

காரம்பாக்கத்தைச் சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் ராதிகா (47), கடந்த 7-ஆம் தேதி மாநகரப் பேருந்தில் பயணம் செய்தாா். வடபழனி பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது ஏடிஎம் காா்டு மூலம் ரூ.13,800 எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது.

இதையடுத்து கைப்பையை சோதனை செய்தபோது, ஏடிஎம் காா்டு, அடையாள அட்டைகள் மற்றும் பணப்பை திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இது குறித்து வளசரவாக்கம் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் அவா் புகாா் கொடுத்தாா். அதன்பேரில், போலீஸாா் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், குன்றத்தூரைச் சோ்ந்த சத்யா (39) திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்து விசாரித்ததில், அவா் மீது 30-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

அலுவலகங்களுக்கு செல்லும் நேரத்தில் கூட்ட நெரிசலான மாநகரப் பேருந்துகள், மின்சார ரயில்களில் ஏறி பயணிகளின் பணப்பையை திருடி, அதிலிருந்த ஏடிஎம் காா்டுகளைப் பயன்படுத்தி பணம் எடுத்து, பின்னா், ஜோலாா்பேட்டைக்கு தப்பிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது. போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments