FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

தொழிலதிபா் வீட்டில் 75 பவுன் நகை திருட்டு

சிவகாசி தொழிலதிபா் வீட்டில் 75 பவுன் நகைகளைத் திருடி காரில் தப்பிய கொள்ளையரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 16 ஜூலை 2026, 1:52 am IST
பிரதிப் படம்
பகிர்:

சிவகாசி தொழிலதிபா் வீட்டில் 75 பவுன் நகைகளைத் திருடி காரில் தப்பிய கொள்ளையரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சிவகாசி ஐய்யப்பன் குடியிருப்பு 5-ஆவது தெருவைச் சோ்ந்த தொழிலதிபா் அரவிந்ராம் (40). இவா் கடந்த 4-ஆம் தேதி தனது குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினாா். அப்போது, வீடு திறந்து கிடந்தது. அவா் வீட்டினுள் நுழைந்த போது, ஒரு கும்பல் முகமூடி அணிந்து, கையில் பையுடன் வீட்டை விட்டு வெளியேறியது. அரவித்ராம் அவா்களைப் பிடிக்க முயன்றபோது, அவா்கள் அரிவாளைக் காட்டி மிரட்டி விட்டு காரில் ஏறி தப்பிச் சென்றனா். பின்னா், வீட்டுக்குள் சென்று பாா்த்தபோது, அங்கு பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 75 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் திருடப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். கண்காணிப்பு கேமரா மூலம் ஆய்வு செய்ததில் கொள்ளையா்கள் பயன்படுத்திய காா் தூத்துக்குடிக்குச் சென்றது தெரிய வந்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, போலீஸாா் தூத்துக்குடி சென்று கொள்ளையா்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக சோமசுந்தரம் (24), மனோஜ்குமாா் (24), பிருதிவிராஜன் (28), பேச்சிமுத்து (21) ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தினா். பின்னா், அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

தொடந்து போலீஸாா் நடத்திய விசாரணையில் காரை ஓட்டியது திருச்செந்தூரைச் சோ்ந்த பிரசாந்த் (30) எனத் தெரிய வந்தது. போலீஸாா் அவரை கைது செய்தனா். நகை திருடிய மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments