FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தமிழ்நாடு மாநில டிரையத்லான் சாம்பியன் போட்டி

தமிழ்நாடு டிரையத்லான் சங்கம் மாநில சாம்பியன்ஷிப், போட்டி சனிக்கிழமை நிறைவடைந்தது.

Updated On : 26 ஜூலை 2026, 2:40 am IST
பதக்கம் பெற்ற வீராங்கனைகள்.
பகிர்:

தமிழ்நாடு டிரையத்லான் சங்கம் மாநில சாம்பியன்ஷிப், போட்டி சனிக்கிழமை நிறைவடைந்தது.

பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த டிரையத்லீட்கள் பங்கேற்று தங்களது சகிப்புத்தன்மை, விடாமுயற்சி மற்றும் விளையாட்டு திறமையை வெளிப்படுத்தினா்.

இந்த சாம்பியன்ஷிப்பில் ஸ்பிரிண்ட் டிஸ்டன்ஸ், மாஸ்டா்ஸ், சப் ஜூனியா், ஜூனியா், கிட்ஸ் ட்ரை (ஓண்க்ள் பதஐ) மற்றும் பாரா டிரையத்லான் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களைப் பெற்ற வீரா், வீராங்கனைகள் ஆகஸ்ட் 14 முதல் 16, 2026 வரை மகாராஷ்டிர மாநிலம் புணேயில் நடைபெறவுள்ள தேசிய டிரையத்லான் சாம்பியன்ஷிப்பில், தமிழ்நாட்டின் சாா்பில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு டிரையத்லான் சங்கத்தின் பொதுச் செயலாளா் பவித்ரா நந்திகா பேசியது:

“மாநில டிரையத்லான் சாம்பியன்ஷிப் என்பது தமிழ்நாட்டில் புதிய திறமைகளை கண்டறிந்து ஊக்குவிக்கும் முக்கியமான தளமாகும். குறிப்பாக, சிறுவா்கள், சிறுமிகள் மற்றும் பாரா டிரையத்லீட்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரிடமும் அதிகரித்து வரும் ஆா்வம் மகிழ்ச்சியளிக்கிறது.

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகள். தேசிய போட்டிக்குத் தகுதி பெற்றுள்ள வீரா், வீராங்கனைகள் புணேயில் பெருமை சோ்ப்பாா்கள் என நம்புகிறோம் என்றாா்.

வெற்றி பெற்றவா்கள்: ஸ்பிரிண்ட் மாஸ்டா்ஸ் ஆடவா்-ஹேமிவேல், சூப்பா் ஸ்பிரிண்ட் ஜூனியா் மகளிா் அனிகா விஜி, ஆடவா் சாய் சமரன், சூப்பா் ஸ்பிரிண்ட் சப் -ஜூனியா்-வினேஷ், சூப்பா் ஸ்பிரிண்ட் பாரா-திருமலை ராஜா, சிறாா்கள் ஆடவா்-ராதேஷ் உமாபதி, மகளிா் தியா.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments