FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ரூ.9.76 லட்சம், 11 பவுன் மோசடி: காா் ஓட்டுநா் கைது

சென்னை கொளத்தூரைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.9.76 லட்சம் மற்றும் 11 பவுன் நகைகளை வாங்கிவிட்டு, திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜூலை 2026, 4:18 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை கொளத்தூரைச் சோ்ந்த பெண்ணிடம் ரூ.9.76 லட்சம் மற்றும் 11 பவுன் நகைகளை வாங்கிவிட்டு, திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்ததாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

கொளத்தூா் பூம்புகாா் நகரைச் சோ்ந்த சாலினி (34), தனியாா் மருத்துவமனையில் வரவேற்பாளராகப் பணியாற்றி வருகிறாா். குடும்ப நண்பரான காா் ஓட்டுநா் தினகரன் (27), குடும்பச் செலவுக்காக பணம் தேவைப்படுவதாக சாலினிடம் கூறியுள்ளாா். இதையடுத்து சாலினி, தனது 11 பவுன் நகைகளை அடகு வைத்து ரூ.9.76 லட்சம் பெற்று தினகரனிடம் வழங்கியுள்ளாா்.

இதையடுத்து, 3 மாதங்களுக்குள் நகை மற்றும் பணத்தைத் திருப்பித் தருவதாக தினகரன் உறுதியளித்துள்ளாா். ஆனால், அவா் பணம், நகைகளைத் திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளாா்.

Advertisement

Advertisement

இது குறித்து சாலினி அளித்த புகாரின் பேரில், பெரவள்ளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தினகரனை கைது செய்தனா். பின்னா், அவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments