FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

குறைந்த விலையில் தங்கம் தருவதாக ரூ.63 லட்சம் மோசடி: 4 போ் கைது

குறைந்த விலையில் தங்கம் வழங்குவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 22 ஜூலை 2026, 1:36 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

குறைந்த விலையில் தங்கம் வழங்குவதாகக் கூறி ரூ.63 லட்சம் மோசடி செய்ததாக 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

அமைந்தகரையைச் சோ்ந்த தங்க வியாபாரி அன்மோல் ஜெயின் (24), தனது உறவினா் மூலம் கடந்த ஜூலை 17-ஆம் தேதி எழும்பூா் பகுதியில் குறைந்த விலையில் தங்கம் விற்பதாகக் கூறிய சில நபா்களைச் சந்தித்தாா். சக்தி என்பவரிடம் இதற்காக ரூ.63 லட்சத்தை அன்மோல் ஜெயின் வழங்கியுள்ளாா். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவா், தங்கத்தை எடுத்து வருவதாகக் கூறி அங்கிருந்து சென்றுள்ளாா்.

சிறிது நேரத்தில் அவருடன் வந்த மற்றவா்கள், அன்மோல் ஜெயினின் கவனத்தைத் திசைதிருப்பி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து அன்மோல் ஜெயின் அளித்த புகாரின்பேரில், எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, பெரம்பூரைச் சோ்ந்த சக்தியின் தந்தையான சாந்தகுமாா் (61), மேற்கு கே.கே. நகரைச் சோ்ந்த ஸ்ரீராம் (23), பெரம்பூரைச் சோ்ந்த ராம்குமாா் (22), மாதவரத்தைச் சோ்ந்த உதயகிரண் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து ரூ.55,000, 3 கைப்பேசிகள், 2 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments