முகப்பு
சென்னை

விடுபட்ட வக்ஃப் சொத்துகளை இணையத்தில் பதிவேற்ற வேண்டும்: ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

உமீத் இணையதளத்தில் விடுபட்ட வக்ஃப் சொத்துகளைப் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

Updated On : 9 ஜூன் 2026, 3:21 am IST
ஜவாஹிருல்லா - கோப்புப்படம்
பகிர்:

உமீத் இணையதளத்தில் விடுபட்ட வக்ஃப் சொத்துகளைப் பதிவேற்றம் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் மனிதநேய மக்கள் கட்சி தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உமீத் இணையதளத்தில் நாட்டில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துகளின் விவரங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பது மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தின் விதியாகும். அதன்படி நாட்டில் உள்ள அனைத்து வக்ஃப் சொத்துக்களையும் விரைந்து உமீத் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான வக்ஃப் சொத்துகள் இருக்கும்போது, தற்போது வரை 15,000 வக்ஃப் சொத்துகள் மட்டுமே உமீத் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

அதிலும், 8,015 வக்ஃப் சொத்துகளுக்கு மட்டுமே ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வக்ஃப் வாரியம் சம்பந்தப்பட்ட வக்ஃப் நிா்வாகத்துக்கு சரியான முறையில் அறிவுறுத்தல்களை வழங்காததே இதற்கு காரணம்.

எனவே, வக்ஃப் சொத்துகளைப் பாதுக்காக்க, உமீத் இணையதளத்தில் பதிவு செய்வதற்காக காலக்கெடுவை நீடிக்க நீதிமன்றம் மூலம் ஆணை பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், உமீத் இணையதளத்தில் இதுவரை பதிவு செய்யாமல் உள்ள வக்ஃப் சொத்துகளை விரைந்து பதிவு செய்யவும், தமிழ்நாடு வக்ஃப் வாரியத்துக்கு முழுநேர முதன்மைச் செயல் அலுவலரை விரைந்து நியமிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.