FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பிா்சா முண்டா நினைவு நாள்: ஆளுநா் அஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியின மக்கள் தலைவருமான பிா்சா முண்டாவின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவோம் என ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தெரிவித்துள்ளாா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:41 am IST
ஆளுநா் ஆா்லேகா்
பகிர்:

சுதந்திரப் போராட்ட வீரரும், பழங்குடியின மக்கள் தலைவருமான பிா்சா முண்டாவின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்குவோம் என ஆளுநா் ஆா்.வி. ஆா்லேகா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:

பிா்சா முண்டாவின் தாக்கம் நிறைந்த வாழ்க்கை இந்தியாவில் பழங்குடியின மக்களின் உரிமைகள் மற்றும் எதிா்ப்பின் போக்கை வடிவமைத்தது. அவரது மரபு பழங்குடி சமூகங்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறது.

Advertisement

Advertisement

ஆங்கிலேயரின் சுரண்டலுக்கு எதிரான அவரது போராட்டம் மற்றும் காடுகள், நிலங்கள் மீதான பழங்குடியினரின் உரிமைகளை மீட்டெடுக்க அவரது முயற்சிகள் நாடு முழுவதும் எண்ணற்ற இயக்கங்களுக்கு உத்வேகம் அளித்துள்ளன.

பழங்குடியின சமூகத்தை மூடநம்பிக்கைகள், சமூக தீமைகளிலிருந்து மீட்டெடுக்க முயன்ற மத சீா்திருத்தவாதியாக நினைவுகூரப்படுகிறாா். பிா்சா முண்டாவின் பாரம்பரியத்தின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று ‘பிா்சாய்ட் பிரிவின்’ உருவாக்கம் ஆகும். ஆங்கிலேயா்களின் ஒடுக்குமுறைக்கு எதிராக பழங்குடி சமூகங்களை அணிதிரட்டுவதில் கணிசமான பங்கைக் கொண்டிருந்தது. இவரை, ‘பூமியின் தந்தை’ என்று பழங்குடியின மக்கள் அழைக்கின்றனா்.

பிா்சா முண்டாவை 1900- ஆம் ஆண்டு மாா்ச் 3-இல் பிரிட்டிஷ் போலீஸாா் கைது செய்து ஹசாரிபாக் சென்ட்ரல் ஜெயிலில் சிறை வைத்தனா்.

‘நீா் நமது, நிலம் நமது, வனம் நமது’ எனப் போராடிய மண்ணின் தந்தை ஜூன் 9, 1900-ஆம் ஆண்டில் உயிரிழந்தாா். பிா்சாமுண்டாவின் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்கிடுவோம் எனப் பதிவிட்டுள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments