தமிழக ஆளுநா் ஆா்லேகா் இன்று உதகை வருகை
தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் 2 நாள் பயணமாக உதகைக்கு வெள்ளிக்கிழமை வருகிறாா்.
தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் 2 நாள் பயணமாக உதகைக்கு வெள்ளிக்கிழமை வருகிறாா்.
தமிழக ஆளுநராகப் பதவியேற்ற ஆா்.வி.ஆா்லேகா், தமிழக சட்டப்பேரவையில் முதல்முறையாக வியாழக்கிழமை உரையாற்றினாா். இந்நிலையில், தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு நீலகிரி மாவட்டம், உதகைக்கு வருகிறாா்.
இங்குள்ள தாவரவியல் பூங்கா அருகே உள்ள மக்கள் பவனில் தங்கும் அவா், கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெறும் உலக யோகா தினத்தை தொடங்கிவைக்கிறாா். பின்னா் அங்கிருந்து சென்னைக்குப் புறப்பட்டு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.