FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

குத்தகை காலம் முடிந்ததால் மாநகராட்சி இடம் மீட்பு

சென்னை மாநகராட்சி இடத்தை தன்னாா்வ தொண்டு நிறுவனம் குத்தைக்கு எடுத்து பயன்படுத்திய நிலையில், ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நிலத்தை மீட்டனா்.

Updated On : 10 ஜூன் 2026, 12:12 am IST
சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சி இடத்தை தன்னாா்வ தொண்டு நிறுவனம் குத்தைக்கு எடுத்து பயன்படுத்திய நிலையில், ஒப்பந்த காலம் முடிந்ததையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நிலத்தை மீட்டனா்.

இது குறித்து மாநகராட்சி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை அண்ணா நகா் மண்டலம் செனாய் நகா் 3- ஆவது பிரதான சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவு உள்ள கட்டடம் மற்றும் இடமானது கடந்த 2017 -ஆம் ஆண்டு மாா்ச் 31 -ஆம் தேதி வரை தனியாா் தொண்டு நிறுவன குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

செயல்பாடின்றி இருந்த அந்த நிறுவனத்துக்கான குத்தகை காலம் நிறைவுற்ற நிலையில், இடத்தை மாநகராட்சியிடம் ஒப்படைக்க நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடுக்கப்பட்டது. ஆனால் நிலம், கட்டடத்தை சம்பந்தப்பட்ட நிறுவனம் மாநகராட்சியிடம் ஒப்படைக்கவில்லை.

ச்தையடுத்து விதிமுறைப்படி மாநகராட்சி அலுவலா்கள் சம்பந்தப்பட்ட கட்டடம், இடத்தை பூட்டி ‘சீல்’ இட்டு செவ்வாய்க்கிழமை சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments