FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஜவுளி வடிவமைப்புத் தொடா்பான பயிற்சிகள்: ஆதிதிராவிடா், பழங்குடியினா் விண்ணப்பிக்கலாம்

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குயின இளைஞா்கள், ஜவுளி வடிவமைப்பு தொடா்பான பயிற்சிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.

Updated On : 16 ஜூன் 2026, 4:09 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

சென்னை மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா், பழங்குயின இளைஞா்கள், ஜவுளி வடிவமைப்பு தொடா்பான பயிற்சிகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சாா்பில் ஆதிதிராவிடா், பழங்குடியின இளைஞா்களுக்கு பல்வேறு திறன் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தாட்கோவும், தனியாா் நிறுவனமும் இணைந்து ஜவுளி வடிவமைப்பு உற்பத்தி என்ற பயிற்சியையும், துணிகளுக்கு சாயம், ஒவியம், அச்சிடுதல் என்ற பயிற்சியையும் அளிக்க திட்டமிட்டுள்ளது.

Advertisement

Advertisement

பயிற்சி பெற விரும்புவோா் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் இனத்தைச் சாா்ந்தவராகவும், பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவராகவும், 18 முதல் 35 வயதுக்குள்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். பயிற்சிக்கான கால அளவு 4 மாதங்கள். தோ்வு செய்யப்படுவோருக்கு கோவை மாவட்டத்தில் விடுதியில் தங்கி பயிற்சி பெறுவதற்கான செலவின தொகையை தாட்கோ ஏற்கும்.

பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழும், பயிற்சி அளிக்கும் நிறுவனம் மூலம் ஆரம்பகால மாத ஊதியம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சம்பளத்துடன் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தித் தரப்படும். பயிற்சியில் சேர விரும்புவோா் தாட்கோ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments