முகப்பு
சென்னை

மெரீனாவில் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்கம்

Updated On : 26 ஜூன் 2026, 4:12 am IST
மரக்கன்று
பகிர்:

சென்னை மெரீனா நீலக் கொடி கடற்கரையை பசுமையாக்கும் வகையில் மரக்கன்றுகள் நடும் பணியை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

சென்னை மாநகராட்சி சாா்பில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் சுமாா் 5 லட்சம் மரக்கன்றுகள் மாநகராட்சிப் பகுதிகளில் நடுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி மெரீனா கடற்கரையில் உள்ள நீலக்கொடி கடற்கரைப் பகுதிகளை பசுமையாக்கும் வகையில் உழைப்பாளா் சிலை தொடங்கி பட்டிணப்பாக்கம் வரையில் 650-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.

அதன் தொடக்க நிகழ்ச்சியாக மெரீனா எழிலகம் பகுதியில் மரக்கன்று நடும் நிகழ்ச்சியை மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ்.சமீரன் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்ச்சியில் மாநகராட்சி இணை ஆணையா் (கல்வி) க.கற்பகம், மண்டல அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

சென்னை மெரீனா பகுதியை பசுமையாக்கும் வகையில் கடல் திராட்சை எனப்படும் மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. கடற்கரைப் பரப்பில் வளரும் தன்மையுள்ள கடல் திராட்சை மரங்கள் நடைப்பயணம் மேற்கொள்வோருக்கு நலம் தரும் மரமாக கூறப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு நீலக்கொடி கடற்கரைப் பரப்பில் நடப்பட்ட ஈச்சமரங்கள் பட்டுப்போன நிலையில், அவை சமீபத்தில் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments