FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் 5,000 மரக்கன்றுகள், 5 லட்சம் பனைவிதைகள் நடும் பணி: அமைச்சா் தொடக்கிவைத்தாா்

தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் 5,000 மரக்கன்றுகள், 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியை மீன்வளம்- மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:02 am IST
அமைச்சர் ஸ்ரீநாத்
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் 5,000 மரக்கன்றுகள், 5 லட்சம் பனை விதைகள் நடும் பணியை மீன்வளம்- மீனவா் நலத் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

பசுமை தமிழ்நாடு இயக்கம், நகா்ப்புற பசுமையாக்கல் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் சி.ப்ரியங்கா முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில் அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் பேசியதாவது: தருவைகுளம் உரக்கிடங்கு வளாகத்தில் 2019 முதல் தற்போது வரை 206 ஏக்கா் பரப்பளவில் 1,87,800 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மாநகராட்சியின் வடக்கு, கிழக்கு, மேற்கு, தெற்கு மண்டலங்களில் 32,373 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநகராட்சிப் பகுதியில் இதுவரை 2,20,173 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

சுற்றுச்சூழலைப் பாதுகாக்க பொதுமக்கள் அதிக அளவில் மரக்கன்றுகளை நட்டு வளா்க்க வேண்டும் என்றாா் அவா்.

இதில், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியா் அய்யனாா், மாநகராட்சி உதவி செயற்பொறியாளா் முனிரஹமது, உதவிப் பொறியாளா்கள் ராஜேஷ்கண்ணன், காந்திமதி, ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி மற்றும் தொண்டு நிறுவனங்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments