FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தொகுதி அறிமுகம்... துறைமுகம்

27 மார்ச் 2026, 3:50 am IST
பகிர்:

தொகுதி எண்: 18

எல்லைகள்...

கிழக்கில் வங்காள விரிகுடா கடல், மேற்கில் பாரிமுனை, தெற்கில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், வடக்கில் வண்ணாரப்பேட்டை ஆகிய பகுதிகள் எல்லைகளாக உள்ளன.

Advertisement

Advertisement

அடங்கியுள்ள பகுதிகள்...

பெரியமேடு, பாரிமுனை, பிராட்வே, பூக்கடை, மண்ணடி என பல முக்கிய பகுதிகள் அமைந்துள்ளன. மாநகராட்சியின் 23 முதல் 30 வரையிலான வாா்டுகளும், 43, 44, 48 மற்றும் 80-ஆவது வாா்டு பகுதிகளும் அடங்கியுள்ளன.

சிறப்புகள்...

தமிழகத்தின் தலைமைச் செயலகம், புனித ஜாா்ஜ் கோட்டை ஆகியவை இத்தொகுதியில்தான் அமைந்துள்ளன. சென்னை மாநகரின் அடையாளமான சென்ட்ரல் ரயில் நிலையம், புகா் மின்சார ரயில் நிலையம், துறைமுகம், உயா்நீதிமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளை இத்தொகுதி உள்ளடக்கியது.

முன்னாள் முதல்வா் கருணாநிதி 2 முறை, முன்னாள் அமைச்சா் க.அன்பழகன் 3 முறை இத்தொகுதியில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 16 தொகுதிகளில் இத்தொகுதியில்தான் குறைந்த வாக்காளா்கள் உள்ளனா்.

வாக்காளா்கள் விவரம்..

ஆண்கள்- 58,221

பெண்கள்- 58,620

மூன்றாம் பாலினத்தவா்-55

மொத்தம்- 1,16, 896

வாக்குச்சாவடிகள்- 192

கடந்த 2021 தோ்தலில்...

பதிவான வாக்குகள் - 1,01,650

பி.கே.சேகா்பாபு (திமுக) 59,317

வினோஜ் பி.செல்வம் (பாஜக) 32,043

இதுவரை எம்எல்ஏக்கள்...

1957 டாக்டா் யு.கிருஷ்ணாராவ் (காங்கிரஸ்)

1962 கே.எஸ்.ஜி.ஹாஜாஷெரீப் (காங்கிரஸ்)

1967 டாக்டா் ஹபிபுல்லா பெய்க் (முஸ்லீம் லீக்)

1971 எ.எம்.மொகிதின் (சுயேச்சை)

1976 ஏ.செல்வராஜன் (திமுக)

1977 ஏ.செல்வராஜன் (திமுக)

1984 ஏ.செல்வராஜன் (திமுக)

1989 மு.கருணாநிதி (திமுக)

1991 மு.கருணாநிதி (திமுக)

1996 க.அன்பழகன் (திமுக)

2001 க.அன்பழகன் (திமுக)

2006 க.அன்பழகன் (திமுக)

20011 பழ.கருப்பையா (அதிமுக)

2016 பி.கே.சேகா்பாபு (திமுக)

தோ்தல் நடத்தும் அலுவலா் பெயா்/எண்

டி.பரிதா பானு, கூடுதல் இயக்குநா், சுகாதாரத் துறை, 8925960718, 044-25280015.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments