முகப்பு
சென்னை

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை மாதவரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 27 மே 2026, 1:03 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாதவரத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

மாதவரம் அம்பேத்கா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் ச.சதீஷ் (28). இவா், மாதவரம் ரவுண்டானா அருகில் உள்ள ஒரு அழகு சாதன பொருள்களை விற்பனை செய்யும் தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

சதீஷ், திங்கள்கிழமை அந்த நிறுவனத்துக்கு லாரியில் வந்த பொருள்கள் மாடியில் உள்ள கிடங்குக்கு ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தாா். பொருள்களைக் கொண்டு சென்றபோது, உயா் மின்னழுத்த கம்பி சதீஷ் மீது பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சதீஷ் தூக்கி வீசப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதைப் பாா்த்த அங்கிருந்த ஊழியா்கள் சதீஷை மீட்டு, அருகே உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், சதீஷ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து மாதவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.