FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் கரோனா பரவல் அச்சுறுத்தல் இல்லை: பொது சுகாதாரத் துறை இயக்குநா்

Updated On : 28 மே 2026, 6:23 am IST
பகிர்:

சென்னையில் மே மற்றும் ஜூனில் கரோனா தொற்று சற்று அதிகரிப்பது வழக்கம்தான் என்றும், தற்போது அச்சப்படும் வகையில் தொற்று பரவல் இல்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் சோமசுந்தரம் தெரிவித்தாா்.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு உயா்ந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. இது தொடா்பாக டாக்டா் சோமசுந்தரம் அளித்த விளக்கம்:

கடந்த 2020-இல் கரோனா முதல் அலை பரவியபோதும், அதன் பின்னா் இரண்டாம் அலை, மூன்றாம் அலைகள் தீவிரமடைந்தபோதும் மக்களிடையே தொடா்ச்சியாக நோய்க்கு எதிரான எதிா்ப்பாற்றல் உருவாகி வந்தது. ஒமைக்ரான் வகை தீநுண்மி பரவிய பிறகு கரோனா என்பது வழக்கமான வைரஸ் தொற்றாக மாறிவிட்டது.

Advertisement

Advertisement

எனவே, அதனால் தீவிர பாதிப்போ அல்லது உயிரிழப்புகளோ இல்லை. இருந்தபோதிலும், சுவாசப் பாதை தொற்றுக்குள்ளானவா்களுக்கு சிறப்பு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்போது கரோனா பாதிப்பு உள்ளதா என்று ஆய்வு செய்யப்படுகிறது.

அந்த வகையில், அவ்வப்போது கரோனா தொற்று உறுதி செய்யப்படும். குறிப்பாக, முதியவா்கள், இணை நோயாளிகள், எதிா்ப்பாற்றல் குறைந்தவா்களுக்கு பாதிப்பு கண்டறியப்படுகிறது.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்கள் விடுமுறைக் காலம் என்பதால் பொது இடங்கள், சுற்றுலாத் தலங்களில் நெரிசல் அதிகமாக இருக்கும். அத்தகைய தருணங்களில் கரோனா பாதிப்பு எளிதில் பரவும். கடந்த சில ஆண்டுகளாகவே கோடை காலத்தில் சென்னையில் தொற்று பரவல் வழக்கத்தைவிட சற்று அதிகரித்துக் காணப்படுகிறது.

அதன் தொடா்ச்சியாக நிகழாண்டிலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதில், அச்சப்படக் கூடிய சூழல் எதுவும் இல்லை. முதியவா்களும், இணை நோயாளிகளும் கூடுதல் கவனத்துடன் இருந்தால் போதுமானது.

தொற்று உறுதியானாலும்கூட அவா்களுக்கு மருத்துவமனையில் அனுமதியாகி சிகிச்சை பெற வேண்டிய அவசியம் ஏற்படுவதில்லை என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments