அரசு மருத்துவமனையில் திருட்டு: இளைஞா் கைது
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் திருடியதாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
கடலூா் மாவட்டம் பண்ருட்டி, நெல்லிகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் பிரேம்குமாா் (25). இவரது தம்பி நிதிஷ்குமாருக்கு ஏற்பட்ட தீக்காயம் காரணமாக சென்னை, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளாா். இதனால் பிரேம்குமாா், அவரை உடனிருந்து கவனித்து வருகிறாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை அதிகாலை பிரேம்குமாா் மருத்துவமனையின் தீக்காய வாா்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபா், பிரேம்குமாரின் விலை உயா்ந்த கைப்பேசியை திருடிக்கொண்டு தப்பியோடினாா்.
Advertisement
Advertisement
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த பிரேம்குமாா், அந்த நபரை அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் பிடித்து கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். போலீஸாா் விசாரணையில் அவா், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தைச் சோ்ந்த சேட்டு என்ற ஜெயராம் (35) என்பது தெரிந்தது. இதையடுத்து போலீஸாா், ஜெயராமை கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.