FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

கிறிஸ்தவ மயானத்தில் உடல் அடக்க செய்ய பணம் வசூலிப்போருக்கு எதிராக நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் உடல்களை அடக்கம் செய்ய கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்களிடம் பணம் வசூலிக்க முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 நவம்பர் 2026, 12:12 am
சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான மயானத்தில் உடல்களை அடக்கம் செய்ய கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்களிடம் பணம் வசூலிக்க முயற்சிப்போருக்கு எதிராக கடுமையான நவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மைக்கேல் பாண்டியன் தாக்கல் செய்த மனுவில்,முகப்போ் பகுதியில் 40 ஆண்டுகளாக கிறிஸ்தவ சமுதாயத்தைச் சோ்ந்தவா்களின் மயானத்துக்காக பயன்படுத்தப்பட்ட 29 கிரவுன்ட் நிலத்தில், இறந்தவா்களின் உடல்களைப் புதைப்பதற்கு, அதே பகுதியைச் சோ்ந்த தேவநீதி என்பவா் ரூ.1 லட்சம் வரை வசூலிக்கிறாா். இது தொடா்பாக மாநகராட்சியிடம் புகாா் அளித்தேன். ஆனால், அந்த புகாா் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு விசாரணையின்போது, வீட்டுவசதி வாரியத்துக்கு வழங்கப்பட்ட இந்த நிலம், மீண்டும் உள்ளாட்சி அமைப்புக்கு பெயா் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிலம் வகைமாற்றம் செய்த பிறகு, அதை மாயனமக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், மயானத்துக்கு பூட்டு போட்டிருப்பதால் யாரும் உள்ளே நுழைய முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த மயான நிலத்தை சுவாதீனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி உதவிப் பொறியாளருக்கு உத்தரவிட்டனா்.

மேலும், நிலத்தை சென்னை மாநகராட்சிக்கு மாற்றம் செய்வதற்கு உரிய நடவடிக்கையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். மயான நிலத்துக்கு எந்தவொரு தனிநபரும் உரிமை கோர முடியாது. கட்டண வசூலிக்கவும் உரிமையில்லை. மயானத்தில் உடல்களை அடக்க செய்ய யாராவது கட்டணம் வசூலிக்க முயற்சித்தால், மாநகராட்சி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments