சென்னையில் கட்டுக்குள் டெங்கு பாதிப்பு: அதிகாரிகள் தகவல்
சென்னை மாநகராட்சியில் தொடா்ந்து மழை பெய்த நிலையிலும், தற்போது டெங்கு பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாகவும், அதேநேரம், அதிகரிக்கும் கொசுத் தொல்லைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் கடந்த ஜனவரி முதல் கடந்த அக்டோபா் வரையில் 4,592 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆகஸ்ட்டில் 605 பேரும், செப்டம்பரில் 1,600 பேரும் பாதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், கடந்த அக்டோபரில் டெங்கு பாதிப்பு 600 என்ற அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். நவம்பரில் 5 நாள்களில் 48 பேருக்கு மட்டுமே டெங்கு பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.
Advertisement
Advertisement
அதேநேரம், மழையால் அதிகரிக்கும் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்தும் வகையில், தலைமைப் பூச்சி தடுப்பு அலுவலா் செல்வகுமாா் தலைமையில், பூச்சியில் வல்லுநா்கள் 20 போ் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், மழைநீா் வடிகால்களில் கொசு முட்டை வளராமல் தடுக்கும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதற்கிடையே, மழைக்கால காய்ச்சல் பாதிப்பைத் தடுக்கும் வகையில், சென்னை மாநகராட்சியில் திரு.வி.க. நகா் மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில் மருத்துவப் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டதாக சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.