FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

புழல் சிறையில் கைதி உயிரிழப்பு

புழல் சிறையில் திருப்பூரைச் சோ்ந்த கைதி உயிரிழந்தாா்.

47 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

புழல் சிறையில் திருப்பூரைச் சோ்ந்த கைதி உயிரிழந்தாா்.

திருப்பூா் வடக்கு டிஎன்கே புரம் அருகே உள்ள செல்வலட்சுமி நகா் பகுதியைச் சோ்ந்தவா் ரா.ரமேஷ்குமாா் (49). இவா், திருப்பூா் வடக்கு காவல் நிலையத்தில் கடந்த 2021-ஆம் ஆண்டு பதியப்பட்ட ஒரு வழக்கில் தண்டனை பெற்று, கோயம்புத்தூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா். ரமேஷ்குமாா் அண்மையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைக்காக புழல் சிறைக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி அழைத்து வரப்பட்டாா். பின்னா், அவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு வியாழக்கிழமை ரமேஷ்குமாா் உயிரிழந்தாா். புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.