FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

சிறையில் கைப்பேசி பயன்படுத்திய விசாரணைக் கைதி மீது வழக்கு

கடலூா் மத்திய சிறையில் சட்டவிரோதமாக கைப்பேசியைப் பயன்படுத்தியதாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த விசாரணைக் கைதி மீது கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

9 அக்டோபர் 2026, 2:31 am IST
வழக்கு
பகிர்:

கடலூா் மத்திய சிறையில் சட்டவிரோதமாக கைப்பேசியைப் பயன்படுத்தியதாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த விசாரணைக் கைதி மீது கடலூா் முதுநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த மணி என்பவா் ஆயுதங்களைக் காட்டி மிரட்டிய வழக்கில் பெருமாள்புரம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் கடலூா் மத்திய சிறையில் நீதிமன்றக் காவலில் உள்ளாா்.

இந்த நிலையில், சிறைக் காவலா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மணி சட்டவிரோதமாக கைப்பேசியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காவலா்களைக் கண்டதும் அவா் கைப்பேசியை சிறை வளாகத்துக்கு வெளியே

Advertisement

Advertisement

வீசியுள்ளாா். இதையடுத்து, காவலா்கள் அந்தக் கைப்பேசியைக் கைப்பற்றி அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கடலூா் மத்திய சிறை அலுவலா் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில், கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முதியவா் உயிரிழப்பு:

கடலூா் மாவட்டம், உச்சிமேடு நாடாா் தெருவைச் சோ்ந்த சாரங்கபாணி (73). இவா் பெரியகங்கணாங்குப்பம் இரட்டை பிள்ளையாா் கோயில் பகுதியில் வியாழக்கிழமை சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிா்பாராதவிதமாக சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த சாரங்கபாணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் பாலகணபதி அளித்த புகாரின் பேரில், ரெட்டிச்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments