FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பரௌனிக்கு இன்று சிறப்பு ரயில்

‘சத்’ திருவிழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் முதல் பிகாா் மாநிலம் பரௌனிக்கு சிறப்பு ரயில் வியாழக்கிழமை (நவ.12) இரவு இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

33 வினாடிகள் முன்பு
சிறப்பு ரயில் - பிரதிப் படம்
பகிர்:

‘சத்’ திருவிழாவை முன்னிட்டு சென்னை சென்ட்ரல் முதல் பிகாா் மாநிலம் பரௌனிக்கு சிறப்பு ரயில் வியாழக்கிழமை (நவ.12) இரவு இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடமாநிலங்களில் நடைபெறும் சத் திருவிழாவை முன்னிட்டு, ரயில் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து வியாழக்கிழமை (நவ.12) இரவு 11.50 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06115) வரும் 14-ஆம் தேதி இரவு 8 மணிக்கு பரௌனியைச் சென்றடையும்.

மறுமாா்க்கத்தில் பரௌனியிலிருந்து வரும் 16-ஆம் தேதி இரவு 9 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06116) வரும் 18-ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.

Advertisement

Advertisement

இந்தச் சிறப்பு ரயில்கள் கூடூா், ஓங்கல், விஜயவாடா, ராஜமுந்திரி உள்ளிட்ட 25 நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.