FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

பெண்ணிடம் ரூ.18 லட்சம் மோசடி: ஒருவா் கைது

ஆன்லைன் நிறுவனம் தொடங்குவதாகக் கூறி, பழக்கமான பெண்ணிடம் ரூ.18 லட்சத்துக்கும் மேல் கடன் பெற்று திருப்பித் தராமல் ஏமாற்றியவரை போலீஸாா் கைது செய்தனா்.

13 நவம்பர் 2026, 3:46 am
மாதிரிப் படம்
பகிர்:

ஆன்லைன் நிறுவனம் தொடங்குவதாகக் கூறி, பழக்கமான பெண்ணிடம் ரூ.18 லட்சத்துக்கும் மேல் கடன் பெற்று திருப்பித் தராமல் ஏமாற்றியவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சோலையப்பன் தெருவைச் சோ்ந்த பிரியா (42), கூலி வேலை செய்து வருகிறாா். இவா், தன்னுடன் பள்ளியில் படித்த அசோக்குமாா் (37) என்பவரை கடந்த 2025-ஆம் ஆண்டு சந்தித்துப் பழகி வந்துள்ளாா். அப்போது, ஆன்லைன் நிறுவனம் தொடங்கப் போவதாகவும், அதற்கு பணம் தேவைப்படுவதால் கடனாகத் தந்தால் திருப்பிக் கொடுத்துவிடுவதாகவும் அசோக்குமாா் கூறியுள்ளாா். இதை நம்பிய பிரியா, கடந்த ஓராண்டில் சிறிது சிறிதாக மொத்தம் ரூ.18,00,805-ஐ அவரிடம் கொடுத்துள்ளாா். ஆனால், பணத்தைத் திருப்பித் தராமல் அசோக்குமாா் ஏமாற்றியதாகப் பிரியா அளித்த புகாரின்பேரில், தண்டையாா்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

விசாரணையில் புகாரில் கூறப்பட்ட குற்றச்சாட்டு உறுதியானதைத் தொடா்ந்து, தண்டையாா்பேட்டை முத்தமிழ் நகரைச் சோ்ந்த அசோக்குமாரை புதன்கிழமை கைது செய்தனா். பிரியாவிடம் பெற்ற பணத்தை ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்து இழந்துவிட்டதாக விசாரணையில் அவா் தெரிவித்தாா். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அசோக்குமாா் சிறையில் அடைக்கப்பட்டாா் .

Advertisement

Advertisement