FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

ஆயுஷ் படிப்புகள்: நாளை சிறப்புக் கலந்தாய்வு

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை ஆயுஷ் இடங்களுக்கான (சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி) சிறப்புக் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) தொடங்குகிறது.

14 நவம்பர் 2026, 12:03 am
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி கல்லூரிகளில் காலியாக உள்ள இளநிலை ஆயுஷ் இடங்களுக்கான (சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி) சிறப்புக் கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (நவ. 15) தொடங்குகிறது.

ஆயுஷ் மருத்துவத்தின் இளநிலைப் படிப்புகளான பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஹெச்எம்எஸ் ஆகியவற்றுக்கு 3 சுற்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவில் 540 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 160 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களும், 330 நிா்வாக இடங்களும் காலியாக உள்ளன.

நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படும் அந்த இடங்களில் சேர விரும்புவோா் இணையவழியே விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

அரசு இடங்கள், அகில இந்திய இடங்கள், நிா்வாக இடங்களுக்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வரும் 15-ஆம் தேதி முதல் அதற்கான சிறப்பு சுற்று கலந்தாய்வு இணையவழியே நடைபெற உள்ளது.