சிறப்புக் கலந்தாய்வுக்குப் பிறகும் காலியாக உள்ள 400-க்கும் அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள்: மருத்துவக் கலந்தாய்வுக் குழு
சிறப்பு மருத்துவக் கலந்தாய்வு சுற்றுக்குப் பிறகும், 400-க்கும் அதிகமான எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.
சிறப்பு மருத்துவக் கலந்தாய்வு சுற்றுக்குப் பிறகும், 400-க்கும் அதிகமான எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன.
இதுகுறித்து மருத்துவக் கலந்தாய்வுக் குழு வட்டாரங்கள் கூறியதாவது: எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்புவதற்கு மருத்துவக் கலந்தாய்வு குழுவால் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. நான்கு சுற்று கலந்தாய்வு நடத்த வேண்டுமென உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
எனினும், 5-ஆவது சுற்று சிறப்பு கலந்தாய்வும் நடத்தப்பட்டது. நான்கு சுற்று கலந்தாய்வுக்கும் பிறகும் நிரப்பப்படாமல் இருந்த இடங்களை நிரப்புவதற்கு இந்த சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement
அப்போது 948 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருந்தன. அவற்றில் 537 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. எனினும் கலந்தாய்வு முடிந்த பிறகும் 411 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக இருந்தன.
கடந்த ஆண்டில் 60 முதல் 70 எம்.பி.பி.எஸ் இடங்களே காலியாக இருந்தன. அந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும் என்று அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.