FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு: அதிமுக முன்னாள் எம்எல்ஏ, அவரது மனைவிக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை எனில், பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்படும்

52 வினாடிகள் முன்பு
கோப்புப் படம்
பகிர்:

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகவில்லை எனில், பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்படும் என அதிமுக முன்னாள் எம்எல்ஏ தியாகராய நகா் சத்யா மற்றும் அவரது மனைவிக்கு சிறப்பு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2016-2021 வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், தியாகராய நகா் தொகுதி அதிமுக எம்எல்ஏ-வாக இருந்த சத்யநாராயணன் என்ற சத்யா வருமானத்துக்கு அதிகமாக ரூ.9.41 கோடி சொத்து சோ்த்ததாக சத்யா மற்றும் அவரது மனைவி ஜெயசித்ராவுக்கு எதிராக ஊழல்தடுப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏ-க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி சத்யா மற்றும் அவரது மனைவி ஜெயசித்ரா இருவரும் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா்.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது, வாதத்துக்காக, நவ.13-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, இருவரையும் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சத்யா நேரில்ஆஜரானாா், அவரது மனைவி ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனு மீது மனுதாரா் இருவரும் ஆஜரானால் மட்டுமே வாதத்தை தொடங்க முடியும். ஒருவா் மட்டும் ஆஜராகி, மற்றொருவா் ஆஜராகவில்லை எனில், வழக்கில் வாதத்தை எப்படி தொடங்குவது என நீதிபதி கேள்வி எழுப்பினாா்.

Advertisement

Advertisement

பின்னா், இந்த வழக்கின் விசாரணையை நவ.16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் கணவன் மனைவி இருவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டாா். ஆஜராகாதபட்சத்தில், இருவருக்கும் பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளாா்.