FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

வானிலை! அடுத்த 3 மணிநேரம் சென்னை, புறநகரில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரம் மழைக்கான வானிலை முன்னறிவிப்பு பற்றி...

கோப்புப்படம் - படம்: ENS
பகிர்:

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்றிரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி படிப்படியாக வலுப்பெற்று, வடக்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் நவம்பர் 16 ஆம் தேதி மாலை புயலாக வலுப்பெறக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதன்காரணமாக அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்துக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றிரவு 7 மணி வரை லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது.

summary

Weather update! Chance of rain in Chennai and its suburbs over the next 3 hours!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.