வானிலை: இரவு 10 மணி வரை சென்னை, 13 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு...
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 10 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
Advertisement
Advertisement
மேலும், காஞ்சிபுரம், ஈரோடு, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, தேனி, சிவகங்கை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.