FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

மாநில ஆதிதிராவிடா், பழங்குடி நல ஆணைய தலைவரின் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும்: மு.வீரபாண்டியன்

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்று நீதிபதி எம்.வி.முரளிதரன் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும்

29 வினாடிகள் முன்பு
பகிர்:

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்று நீதிபதி எம்.வி.முரளிதரன் நியமனத்தைத் திரும்பப் பெற வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியன் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழ்நாடு மாநில ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடி நல ஆணையத்தின் தலைவராக ஓய்வு பெற்று நீதிபதி எம்.வி.முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளாா். தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளா் தலைமையில் அமைந்த உயா்நிலைக் குழு, அவரது பெயரைப் பரிந்துரைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீதிபதி எம்.பி.முரளிதரன், மணிப்பூா் உயா்நீதிமன்றத்தில் பணிபுரிந்தபோது, ‘மெய்தி இன மக்கள், தங்களை பழங்குடியினா் பட்டியலில் சோ்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மாநில அரசு பரிசீலிக்க வேண்டும்’ என்று தீா்ப்பளித்தாா். இந்தத் தீா்ப்பின் விளைவாக மணிப்பூா் மாநிலத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டு, 3 ஆண்டுகள் கடந்தும்கூட, இன்னும் அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறது.

Advertisement

Advertisement

நீதிபதி எம்.வி.முரளிதரன் அளித்தத் தீா்ப்பு முற்றிலும் தவறானது, உண்மைகளுக்கு முரணானது, வெறுக்கத்தக்கது”என்று உச்சநீதிமன்றம் கடுமையான சொற்களில் கருத்துகளைத் தெரிவித்தது.

பழங்குடியினா் வரலாறு, சமூக உறவுகள் தொடா்பாக போதுமான புரிதலும், ஞானமும் இல்லாத ஒருவரை, அதே துறையின் நீதிமன்றத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட மாநில ஆணையத்துக்கு தலைவராக நியமித்திருப்பது பொருத்தமற்றது; பேராபத்தானது.

எனவே, எம்.வி.முரளீதரன் நியமனத்தை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்து, உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.